சனி, 24 மே, 2008

விஞ்ஞான தினம் யாழ் இந்து 31 10 1997

முகப்பு


திறந்த ஒரு மனதுடனே செய்ய ஒரு கவி அரங்கில்


இறங்கி நாம் நிற்பதுவே இப் புவியில் - கரம்குவித்து


இரந்துன்னை கேட்கின்றோம் எழில் முருகா நல்லுரா


விரைந்தெமை காப்பாய் விழைந்து!





தலை நிமிர கவி எழுத தன் வழியில் பழக்கிவிட்ட


இளம் கிழவர் வே இதயத்திலே போற்றுகிறேன்





அரங்கத்தின் தலைவற்கும் அவசரத்தில் கவி எழுத


உறங்காது கண் விழித்த உடனிருக்கும் கவிஞர் கும்


திறம் காண கூடி நிற்கும் சிறுவற்கும் பெரியோர்க்கும்


உரம் கொண்டு சொல்லிடுவேன் உங்களுக்கு என் வணக்கம் !





விரிகின்ற விஞ்ஞானம் வியப்பளிக்கும் - campus


செருக்காலே உயிர் எடுத்து சென்றவரின் பழி எல்லாம்


நெருப்பாக ம் மீது நிறை தவறி எறிந்தாலும் இங்கு


விரிகின்ற விஞ்ஞானம் வியப்பளிக்கும்!





ஓடி நாங்கள் இருவருசம் ஒழுங்காக திரும்பிவந்து


பாடுகிறோம் நாம் இங்கு பார்க்கும் இந்த விந்தைகளை


முடிப்பவன் நான் மேடை ஏறி முழங்கட்டோ எனப் பார்க்க


அடிக்கொருக்கால் சிரித்து இங்கு ஆதரவு தந்திடுக !





தீவாளி சாப்பாடு செமிக்காமல் நான் வந்து


நோயாளி போல் ங்கு நுடங்கிடுவேன் -பேசாமல்


குசினிக்குள் பூந்திட்டால் கூப்பாடு கேட்காது


மனிசிக்குப் பயம் இங்கு நான்!





நாளை வகுப்புக்கு வெளியில்


சீலன் செய்யும் வேலையில் நாங்கள்


நாளை வகுப்புக்கு வெளியில்





பலநாள் மேடை ஏறிப் பார்த்துள்ளேன் ஆனாலும்


கலபுல என்று நானும் கலங்கியது இன்று மட்டும் - காரணம் தெரியாது


என்றாலும் என்கவிதை எழுத வைத்த பரம் பொருளை


மன்றிலே வைத்து ஒருகால் மனதிலே நினைத்திடுவேன்








தலைப்பு


விரிகின்ற உலகினிலே விஞ்ஞானம்





எரிகின்ற பூமியிலே இருந்துகொண்டு , அது மறந்து


விரிகின்ற விஞ்ஞானம் விளம்பிடுவோம் -சரிஎன்று


தலையாட்டிக் கொண்டெமக்கு தந்திட்டால் உற்சாகம்


கலையோடு வருமே கவி !





ஆக்கமும் விஞ்ஞானம் எம்மை அழிப்பதும் விஞ்ஞானம்


காப்பதும் விஞ்ஞானம் எங்கள் கல்வியும் விஞ்ஞானம்


ஊக்கமும் விஞ்ஞானம் நம் உணர்வுகள் விஞ்ஞானம்


தாக்கமும் விஞ்ஞானம் அதை தாங்குமோ இந்த ஞாலம் ?





காதலும் விஞ்ஞானம் எங்கள் கடவுளும் விஞ்ஞானம்


சாதலும் விஞ்ஞானம் பெரும் சாதனை விஞ்ஞானம்


மோதலும் விஞ்ஞானம் வரும் முடிவுகள் விஞ்ஞானம்


ஈதலும் விஞ்ஞானம் சக்தி ஏற்பதும் விஞ்ஞானம்





ஓடுகிற சைக்கிளிலே விஞ்ஞானம்


ஒளிர்கின்ற மின் விளக்கில் விஞ்ஞானம்


பாடுகிற வானொலியில் விஞ்ஞானம்


பதிகருவி செய்வதுவும் விஞ்ஞானம்


கூடு கட்டும் பறவையிலே விஞ்ஞானம்


குளிப்பதற்கும் கூட இங்கு விஞ்ஞானம்


தேடுகிற பொருளில் எல்லாம் விஞ்ஞானம்


சிரிப்பீரோ ? அது உங்கள் அஞ்ஞானம்





களவெடுக்கும் கலையினிலே விஞ்ஞானம்


கண்டறியும் தொழில் தனிலும் விஞ்ஞானம்


உளவறியும் பெருமையிலும் விஞ்ஞானம்


ஊறிவிட்ட பல்துறையில் விஞ்ஞானம்





இது மின்சாரக் கனவல்ல , விஞ்ஞானக் கனவு !!





சந்திரனில் குளம் கட்டி குளிக்கவேண்டும்


சாப்பிடவே கனிகள் அங்கு கிடைக்க வேண்டும்


இந்திரன் போல் இளமை என்றும் இருக்க வேண்டும்


இரவு பகல் இல்லாது ஒளி கிடைக்க வேண்டும்


அந்தரத்தில் தொங்க நடை பயில வேண்டும்


அவசியத்தால் கால்கள் தரை படிய வேண்டும்


எந்திரத்தால் வேலை இங்கு இயற்ற வேண்டும்


இளங்குயிலே என்னுடன் நீ இருக்க வேண்டும்





வளரும் இந்த விஞ்ஞானம் வழிகள் பலவாய் திறந்து விடும்


அழகும் அறிவும் ஒன்றாக அடக்கம் அதனில் சேர்ந்துவிடும் !





குளோனிங் முறையால் டயானாவை


கோடி முறைகள் உருவாக்கும்


பிளான்கள் எல்லாம் நமக்குண்டு


பிறகு யாரை கொஞ்சுவது?





செத்துப் போனார் செல்லையர்


செல்லுலர் போனில் பேசாமல்


மொத்த உறவும் கனடாவில்


முகங்கள் படத்தில் வந்திடுமே !








உள்ள படி படமெடுக்கும் ஒன்று -போட்ட


உடை களைந்து படமெடுக்கும் ஒன்று


எள் அளவை பெருப்பிக்கும் ஒன்று - படம்


எடுப்பவரை கவனிக்கும் வேறொன்று !





தலை இன்றி தவளை தரும் ஒன்று -அதை


தடுத்திடுக என்கிறது ஒன்று


இலை இன்றி மரம் தரும் ஒன்று - கொடும்


இரவிலே துணை இருக்க ஒன்று !





விண்வெளியில் பறக்கவென ஒன்று - நாம்


வீதியிலே பறக்கவென ஒன்று


தண் மதியில் இறக்க என ஒன்று - அத


தரையினிலே ஓட வேறு ஒன்று !





செவ்வாயில் பதிய என ஒன்று - அவள்


செவ்வாயில் பதிய என ஒன்று


பொய்யான காசடிக்க ஒன்று -அதை


பொறுப்பாக பிடிக்க வேறொன்று !





ஜப்பானில் கார் செய்து யாழ்ப்பாணம் கொண்டு வர


அப்பூ வெரி ஸ்டைல் என்று வென்று வாய் பிளக்கும்


தப்பான மனநிலைகள் தரணியிலே மாறிடட்டும்


இப்போதே மனம் வைத்தால் இங்கும் கார் செய்திடலாம்





சீதனமாய் கார் கேட்கும் செல்வங்களை பிடித்து வந்து
நூதனமாய் கழற்றி காரை நூற்கின்ற அறிவு தனை
ஆதனமாய் கேட்டிடுவீர் ஐ யோ எனச் சொல்லிடுவார்
வேதனைகள் ஒன்றும் இல்லை எம் வீடுகளின் நிலைமை இது !

வெளி நாட்டான் முன்னேற எம் விரி வாயில் ஈ நுழையும்
களியாட்ட வேலைதனில் காட்டுகிற கரிசனைகள்
துளிர்விட்ட அறிவியலில் தொட்டோமா ? வெட்கமடா !
தளிர்கட்டும் இனியேனும் தமிழரிலும் விஞ்ஞானம் !

மாறாத மனம் வேண்டும்
மறுவில்லா குணம் வேண்டும்
சேறில்லா தலை வேண்டும்
சேவைக்கு தளம் வேண்டும்
வீறான உடல் வேண்டும்
வெற்றிகளே பெற வேண்டும்
தேறாத நிலை மாறச்
செய்திடுமோ விஞ்ஞானம்?


பொறுப்பற்ற விஞ்ஞானம் புதைகுழிகள் உருவாக்கும்
திருத்தும் மனத் திறம் உள்ளோர் திறமைகளை பெறவேண்டும்!

வணக்கம்