மருத்துவ பீடம்
கவியரங்கு
சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்களெல்லாம்.
தூயதாய் நூல்கள் கற்று துல்ங்கிவரும் இச்சபையில்
பாலகன் நான் வந்து பாடுவதோ? – யாரிவரோ?
தொக்கிநிற்கும் கேள்வி துவங்கின் எனைக்காக்க
விக்கினேஸ்வரா சொல்லு விடை!
வள்ளியை மணமுடிக்க வயோதிபனாய் வந்த
வெள்ளி மயில் வாகனனே வேலவனே – நல்லூரின்
உள்ளிருந்து கொண்டே உயிர்காப்பாய் என் கவிக்கு
கல்லெறி சேராமல் கார்!
பெற்றுப் புரந்தந்து பேணிப்பல செய்து
உற்ற தேவைகளை உடன்முடித்து- கற்கவைத்து
நாலுபேர்முன்னே நடமாட வைத்த வைத்த அம்மா நீ
போனாலும் மறவேன் புகழ்!
எதுகை மோனை இலட்சணங்கள் கற்பித்து
புதுமை செய்கின்ற புரட்சியனே – ச வே ப
பா வாடை பிடிக்க வைத்த பாவலனே உன்னுதவி
தேர்மீது ஏறும் திகழ்!
படிக்காமல் நடுவீதி திரிந்தாலும் கைமீது
கொடுக்காமல் காப்பாற்றும் குலமகளே- கலைவாணி
இரண்டுதரம் பரீட்சை எடக்காமல் எனைக் காத்த
பெண்புலியே அன்பின் புரம்!
பகிடிவதை எதிர்ததுப் பாடுபட்ட எங்களுக்கு
உறுதுணைபுரிந்த உத்தமரே – திவா அண்ணா
நீங்கள் சொன்னபடி நிற்கின்றோம் இப்புவியில்
தாங்கும் இனியென் தமிழ்!
கும்மிருட்டு கூவுகின்ற மைக்செற்று அவியல் வெக்கை!
எட்டு வருசமாய் மாறாமல் இருக்கின்ற உமைப்பார்க்க ஒரு
மகிழ்ச்சி!!!
வாங்கோ என்றாலும் வரவேண்டாம் என்றாலும்
போங்காணும் என்முடிவு மாறாது- வருவேன் நான்
குருதான் என்பெயர் என்றாலும் குளிர் உறைக்கா தடித்த
எருமை மாட்டுக் குணம்!
தடிகள் தனியாகி தவிடாகி உடையுமென்றால்
அடியால் அவற்றை அழகாக – கொடியோடு
பத்துப் பெடியளைப் பார்த்து வைத்து ஒன்றாகக்
கட்டிவைப்பதே கரைச்சல்!
சொல்லுக்கடங்காத சூரத்தனம் செய்து
கல்லைக் கரையவைத்த காரிகையே – கொல்லுவிழி
வலைமாட்டிக் கொண்டிருக்கும் வரலாறு எந்தனுக்கு
தலைமாட்டில் நீயே தனி!
மின்சார விளக்கின்றி மினுமினுக்கும் குப்பியிலே
கண்சோர படித்து நாம் கரை சேர்ந்தோம் - வந்தோரே
கல்வி தலை நிமிர்த்திக் காட்டியதால் இம்மண்ணில்கவி
சொல்ல விழும் பலாச் சுளை!
காவலரண் சூட்டிற்கும் காப்பாற்றும் மண்மூட்டைக்கும்
மேல்வந்து விழுந்து வெடித்த செல்லுக்கும் - போய்வந்து
தலைகொடுத்து வநடத தமிழர் நாம் இப்புவியில்
விலையில்லை வீழும் உயிர்!
நாலுபாடம் படித்து நாலுக்கும் ஏ எடுத்து
வேலைசெய்த மக்கள் வங்கியிலே – நாளுக்கு
இருநூறு ரூபாக்கு இரவுவரை வேலைசெய்த
அரும்புகளும் நாம்தான் அறை!
கோட்டை அரண் சூழ்ந்து கும்மிருட்டு நேரத்தில்
நாட்டைக் காக்கின்ற நல்லவர்க்கு – கேட்டவுடன்
பங்கர் வெட்ட புது மண்வெட்டியுடன் போகும்
தங்கமான பெடியளும் தான்!
சீனி மாக் கப்பல் எப்ப சேரும் என காத்திருந்து
பனிநேரம் உதயன் படிக்கேக்கை – நாளைக்கு
லங்காஸ்ரீ வருகிறதாம் நல்லந்தான் வேளைக்கு
பொங்கலுக்கு அரிசி புடை!
கப்பலது வந்திற்றாம், கடம் காற்றாம் பாஜ் எல்லாம்
தெப்பமாய் நனைஞ்சிட்டாம் - சிரிப்புடனே
நனைந்த சீனியினை நம்தலையில் கட்டிவைத்த
கனம் சங்கக் கடையானே கடை!
(வேறு)
குண்டு வீசும் கழுகைக் கண்டு
குடலை உயிரைக்காக்க என்று
தொன்று தொட்டு ஓடிவந்த நாங்கள் - இப்போ
தொடங்கி விட்டோம் குண்டு வீசப் போங்கள்!!!
கலைச்சு கலைச்சுச் சுட்டுமென்ன
கவிழ்ந்து வீழ்ந்து பார்த்துமென்ன
களைச்சுப்போச்சு உங்கள் சுப்பர்சோனிக்கு – வித்தை
காட்டும் எங்கள் விமானம் மூடுபனிக்கு!
சுற்றி ஒரு வேலிபோட்டு
சுழலுகின்ற ராடர் போட்டு
கற்றதென்ன நீர் புதுக் கணக்கு! – உங்கள்
கனவு சிதைக்கும் நான் ஆமணக்கு!
ஆயிரமாய்ப் பல்குழல்கள்;
ஆயுதங்கள் வாங்கியென்ன
போயிரவில் பிடிப்பம் என்று சொல்லி – போட்ட
பொய்களுமே சிரிக்கிறது எள்ளி!
மீட்கப்போறம் என்றுசொல்லி – எங்கள்
வீடுவாசல் உடைக்குமுங்கள்
காட்டெருமைக் கூட்டத்திற்கு நாளை
காலிடையே தண்ணிபாயும் வேளை!!
வெள்ளைவானில் வந்து சேர்ந்து
வெருட்டப்போறம் என்று சொன்னால்
வெள்ளைவானில் ஏறிநிற்பா வேணி- அவ
வெள்ளைமீது விருப்பமுள்ள ஆள் நீ!
பொய்கள் மட்டும் சொல்லுமுங்கள்
புளுகல் புரட்டல் சாக வெங்கள்
பையன்கள் வந்து சொல்வார் பாடம் - நீங்கள்
படிக்கப்போகும் அறிவுப் பள்ளிக்கூடம்!
(வேறு)
Cervix எடி நீயெனக்கு - Cusco
Speculum தான் நானுனக்கு!
skeletonஅடி நீயெனக்கு – சேரும்
கல்சியம்தான் நானுனக்கு!
Foetus நீயெனக்கு!
Placentaதான் நானுனக்கு!
Heart beat எல்லாம் நீயெனக்கு!-SA
கணுதான்ரி நானுனக்கு!
HDLஏ நீயெனக்கு!
LDL தான் நானுனக்கு!
Watson Crick நீயெனக்கு!- DNA
வளைவுகளோ நானுனக்கு?
(வேறு)
நெஞ்சில் உதைக்கும் நெடுங்காற்றை கொடுவெயிலை
பிஞ்சை நடுங்கவைக்கும் பேய்க்குளிரை – கேகாலை
மண்ணில் விட்டிட்டு வருவேன்நான் தமிழ்கேட்க
அண்ணரே நீர் சொல்லும் அறிவு!
கடுகதி வேகத்தில் கவிசொல்லிப் பயன் என்ன
விடுகதை போலப் பொருள் விளங்காட்டால் - புரிந்துகொண்டு
அர்ப்பணிப்புள்ள அடியேனில் மனமிரங்கி கலைத்தேவி
சொர்க்க வாயில் தந்தால்; சுகம்!
( சொக்கை வாயைத் தந்தால் சுகம்!)
வணக்கம்!
புதன், 22 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)