கொழும்பு பல்கலைக்கழகம் மருத்துவ பீடம்
வாணிவிழா 2007
நீறு பூ த்த நெருப்பு
எலிவாகனத்தனை இடர்களையும் நாயகனை
கலியகல கால்பிடித்து கைதொழுதோம்- வலியகல
தம்பி எனைக்காத்து தமிழறிவு தந்திடுக
தும்பிக்கையானே துணை!
நாத மணி கேட்டு நல்லூர் தொழுதெழுந்த
போது மனதிருந்த துயரகலும்- வேலவனே
வள்ளி மனம் கவர்ந்த மணவாளா என்கவியின்
சொல்லில் உந்தன் சுரம்!
சாவே இல்லாத தமிழ் தந்து கவியென்ற
கோவை படிப்பித்த கோவே- ச. வே
பஞ்சாட்சரப் புலவன் பாதம் பணிவதற்கு
நெஞ்சமே தொழுது நினை!
இரண்டாயிரம் தொடங்கி இன்றைவரை உந்தனுக்கு
பண்டாரத்தின் சங்காய்ப் பதிலிறுக்கும்- தண்டாமரை
ஏறியமர்ந்த இளங்குயிலே சரஸ்வதியே இக்கவியை
காறித் துப்பாமல் கார்.
தோளை அமர்த்துகின்ற சுமைதந்த Internship
நாளை முடியுமென்ற நம்பிக்கை –வேளையொடு
வேலை தேடுகிற வேளை வந்ததுபார் ஒன்
கோலுக்கு ஓடுகிற குணம்
உள்ள நெருப்பெல்லாம் ஊதியணைக்காமல்
கள்ளமாய் இருக்கும் கனற்பொறியை – துள்ளிவரும்
சொல்லில் வடித்தால் சுகமில்லைப் பலபேர்க்குத்
தள்ளிப் போகுதாம் தமிழ்.!
நொங்குபனை தொங்குகனி வெம்பலின்றித் தந்துமகிழ்
சங்கம்வளர் இன்பமது மூன்று- கவி
தந்திடுமே நல்ல ஒரு சான்று!
குண்டுவெடி கண்டபடி உண்டகதை அன்றுஅதை
வென்றவர்கள் உள்ள தமிழ்த் தேசம் -அதன்
வேலியிலே கந்தகத்தின் வாசம்!
தொண்டனென நின்றவர்கள் தொய்ந்து மனமாறியதால்
துண்டுபட்டுப் போனது பார் கிழக்கு- நீதித்
தூண்டியிலே சிக்கியதாய் வழக்கு!
வைத்தகுறி பற்றியடி சுட்ட ரவை தொட்டஉடல்
செத்ததுபார் தமிழனது வாழ்வு- நிதமும்
சேருகிற தொகையிலி;ல்லை தாழ்வு!
இது வயது வந்தவர்களுக்கான கவிதை
விளங்காமல் போனால்
தப்பபிப்பிராயம் கொண்டு
தடுமாறக் கூடாது.
Replication இல் நடந்த தவறுகளை திருத்தும்
டி என் ஏ போல்
திருத்தப்பட்டு வருகிறது
வரிகள்.
இடையிடையே சிலசில Nonsence codon கள்
எட்டிப்பார்த்தாலும் அவையும்
தவிர்க்க முடியாத சில தங்கல்கள்.
Term ஆன Primi க்கு
Cervix ஐ பார்த்திட்டு
ARM செய்தேனே பாரும்- அவள்
ஏலாதெண்டு சொன்னாலும் கேளும்
CTG flat ஆனால் Changing her position என
செய்தாலும் Reactive ஆய் இல்லை- ஈற்றில்
சீசரிலை பிறந்ததுபார் பிள்ளை!
IUDஅம்மாக்கு FHS எழுதுகிற
மோடுகளும் HOஆய் இருக்கு- அந்த
Motion இலை ஏறுமெந்தன் கடுப்பு!
காதல் என்பது ECG Changes
இல்லாமல் வரும் MIபோன்றது. அதன்போது
Aggrigation ஐ தடுக்க
Aspirin கோடுக்க வேண்டியுள்ளது.
Angina வரும்போதே
அவதானமாக இல்லாவிட்டால்
அவுட் ஆக வேண்டியதுதான்!
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது
இன்று உடைக்கப் பட்டிருக்கும்
Anatomy block இன் தேமா மரத்தில்
ஏறியாய்ந்த பூக்களைக் கொண்டு நாங்களே மாலை கட்டிக்கொண்டதால்
சரஸ்விபூசையின் மொத்தச் செலவு
150 ரூபாயால் குறைக்க முடிந்தது.
நேற்று அவளிடம் கேட்டேன்
உனக்கு மாலை கட்டத் தெரியுமா என்று
என் கழுத்தில் போடாவிட்டாலும்- கடைசி
கடவுளின் கழுத்திலாவது போடுவதற்கு!
நீண்ட நாட்களின் பின் சந்தித்த பள்ளித்தோழி
கேட்டாள் , நீர் இப்போது நிறையப் பொய் சொல்கிறீராம்!
நான் சொன்னேன் நீயும்
Community medicine படித்துப்பார்
புரியும்!!!
எப்படிப் போகிறது வாழ்க்கை என்று கேட்டான் Faculty kஇடிக்காததால்
Uk போய் நல்லாய் இருக்கும் என் நண்பன்
சொன்னேன்,
எப்படியடா இருக்கிறாய் என்று
ஒவ்வொருநாளும் கேட்கும் அம்மாவின்
ஆசிகளுடனும்நீ திருந்தப் போவதில்லை என்று அவள் திட்டி eluthiya SMS udanum வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!
தமிழ் படித்ததுக்கொண்டிருக்கும்
இன்னொருவன் சொன்னான் இலக்கியம்!
இராமன் சூர்ப்பனகையின் முலையைக் கொய்யாமல்
தலையைக் கொய்திருந்தால்
அழவேண்டி வந்திருக்காது
அவனும் அவளும்
எனக்கும் அது சரிபோலவே பட்டது.
சமாதானம், உடன்படிக்கை, சர்வதேச சமூகம்
இந்த மூன்று வார்த்தைகளும் இல்லாமல்
எப்போது வானொலி செய்தி வாசிக்கிறதோ
அப்போததான் எமக்கு விடுதலை!!
வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக